பொதுமக்களை பாதுகாப்பது பொறுப்புள்ள அதிகாரிகளின் கடமையாகும் - சுகாதார அமைச்சர் நஸீர்

அபு அலா-
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள், தேநீர்க் கடைகள், பழக் கடைகள், பலசரக்குக் கடைகள் போன்றவற்றை கண்டறியும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்திலுள்ள எல்லா இடங்களையும் பரிசோதனை செய்யவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை இன்றிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றும் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் சகல சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.

சுற்றாடல் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு இன்று (30) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவினை பிரப்பித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், மாகாணத்திலுள்ள அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், இந்த பணிமனையின் கீழ் இயங்குகின்ற சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தின்போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார முறையற்ற ரீதியில் இயங்குகின்ற சகல கடை உரிமையாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும். அவ்வாறு எடுக்கப்படுகின்றபோது அவர்களுக்குள் எவ்வித பாகுபாடுகளும் யாருக்கும் காட்டக்கூடாது என்றும் கூறினார்.

தேசிய உணவுப் பாதுகாப்பு வாரம் ஒருவார காலத்துக்கு முன்னெடுக்கப்படுகின்றது. இதனை கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இந்த வேலைத்திட்டத்தின்போது தேநீர்க் கடைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள், பழக் கடைகளும் அவற்றின் சுற்றுப்புறச் சூழலும் அவதானிக்கப்பட்டு, சுகாதாரத்தைப் பேணாத உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வைக்கவேண்டும். 

சுகாதாரமான முறையில் உணவுகளைக் கையாளும் முறைகளையும், கழிவுகளை முறையாக அகற்ற தொடர்பாகவும், உணவுகள் தயாரிக்கும் அல்லது சேகரித்து வைக்கும் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை பற்றிய விழிப்புணர்வுகளை நீங்கள் வழங்கி வைக்க முனையவேண்டும். 

சுகாதர முறையில் பொதுமக்களை பாதுகாகாகும் பொறுப்பு எம் அனைவர்களின் மீதுள்ள கடமையாகும் என்பதை நாம் உணர்ந்து நமது பணிகளை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எ்னறும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -