கடந்த 2016.11.17 ந் திகதி.CEETS நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்ககளுக்கு நடாத்தப்பட்ட பரீட்சை வினாத்தாள் மோசடி (சர்ச்சைக்குரிய) சம்பந்தமான ஆதாரங்களுடனும் மாணவர் சமூகம் அனுப்பிய அறிக்கைகையையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகிறார் பிரபலகணக்கீட்டு ஆசிரியர் ஐ.எல்.ஏ. சலாம்
நிந்தவூர் வாழ் கல்விமான்களே! புத்தி ஜீவிகளே மார்க்கப் பெரியார்களே! மற்றும் தேசிய பாடசாலை சமூகமே!
நேரடியாக விடயத்திற்கு வருகிறோம். எழுத்தறிவித்தவன் இறைவன் அதே எழுத்தை இன்று எங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு கல்வி எனும் திரு வாசகம் கொண்டு மேண்மையுடன் கற்பித்து அவர்களை வாழ்வில் உயர்த்தும் பொண்ணான பணி புரிபவர்கள் தான் ஆசான்கள். அந்த வகையில் இன்று எமதூரின் உயர் தரக்கல்வி நிலை (தேசிய ரீதியில் பிரபல்யமடைந்துள்ள வர்த்தகப் பிரிவு) இவ்வாண்டின் அண்மைக்காலங்களில் பாரிய தாக்கத்தை (சாதக, பாதக) ஏற்படுத்தியமை தாங்கள் அறிவீர்கள்.
அதிலும் கடந்த 2ஆம் தவணைப் பரீட்சை (கணக்கீட்டு பாடம்) பாரிய சர்ச்சையை (திட்டமிடப்பட்ட) ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இறுதியில் இது ஒரு தனி மனிதப் பழிவாங்கள் என அடையாளம் காணப்பட்டமையும் யாம் அறிவோம். தேசிய ரீதியில் பிரபல்யமடைந்த அதுவும் எங்கள் மண்ணை சேர்ந்த ஒருவருக்கு நாமே சேறு பூச முனைந்த ஓர் கசப்பான நிகழ்வும் ஞாபகமிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட ஒரு சில காலப்பகுதியில் எங்கள் மாணவச் செல்வங்கள் பட்ட துயரங்களும் அலைச்சல்களும் இந்த பாடசாலை சமூகம் நடந்து கொண்ட விதமும், நகைப்பிற்கும், வேதனைக்குமுரிய காரியமாகும். சரி விடயத்திற்கு வருவோம். அன்றைய நாள் குறித்த கணக்கீடு பாட ஆசிரியர் மீது எங்கள் ஊரின் தேசிய பாடசாலை சமூகத்தினால் சுமத்தப்பட்ட பரீட்சை வினாத்தாள் மோசடி குற்றச்சாட்டு போல் இன்று அச்சொட்டாக ஒரு விடயம் நடந்துள்ளமையும் அதனை குறித்த பாடசாலை சமூகம் உறங்கு கண் கொண்டு பார்ப்பதையும் நாங்கள் கூர்ந்து கவணிக்கின்றோம். அன்றைய தினம் பாடசாலை சமூகம் சமூக வலைத்தளங்களிலும், இம்போட் மிரர் இணையத்தலத்திலும் வேறு இடங்களிலும் சில நடவடிக்கைகளிலும் ஒரு தனி மனிதனை ஓரங்கட்ட எடுத்த முயற்சிகள் நாங்களும் அறிவோம்.
கடந்த 2016.11.17ந் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் (நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை, மதினா மகா வித்தியாலயம், அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை உட்பட) நடாத்தப்பட்ட CEETS நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கீடு மற்றும் பொருளியல் (நான்காந் தவணை பயிற்சிப் பரீட்சை - நவம்பர் 2016) பரீட்சை வினாத்தாள்களில் அப்பட்டமாக அறங்கேறிய பரீட்சை மோசடிக்கு இன்னும் துலங்கள் இல்லாத நிலையில் பாடசாலை சமூகம் இருப்பது வேடிக்கையாக உள்ளது. அன்று பரீட்சை நடந்த கையோடு குறித்த தனி மனிதரையும் தனியார் கல்வி நிறுவனத்தையும் தாக்குவதற்கு மூக்கு வியர்க்க வந்தவர்கள் இன்று குளிருக்கொதுங்கிய கோழிக் குஞ்சுகளாய் இருப்பதன் காரணம் என்ன? இப்படியான செயற்பாடு இவர்களின் இலட்சனத்தை சரியாக புடம் போட்டுக் காட்டுகின்றது.
அதிகம் பேச நேரமில்லை. உங்கள் பாடசாலை உங்கள் பாடசாலை என்று தம்பட்டம் அடிக்க தெரிந்த உங்களுக்கு ஓர் விடயம்! இது ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு சொத்தல்ல. இது எங்களுடையதும் தான் மட்டுமல்லாது இது நியாயம் கோருகின்ற நேரம். கடந்த காலத்தில் உங்கள் பாடசாலை சமூகத்தின் அறிக்கை மற்றும் குறித்த ஆசிரியரின் அறிக்கைகள் என ஏட்டுக்குப் போட்டியாக சமூக வலைத்தலங்களில் உலா வந்த சங்கதிகளும் எம்வசமுள்ளன.
அன்று அந்த ஆசிரியர் செய்தது ஓர் கொலைக்குற்றம் போன்றும் அவரிடம் கல்வி கற்க செல்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும் படிக்கின்ற மாணவ, மாணவிச் செல்வங்கள் எனக்கூட பாராது உங்கள் தாழ்வுச்சிக்கலிற்காய் அந்த மாணவச் செல்வங்களை மனித உரிமை ஆணைக்குழு வரை படியேறச்செய்த கணவான்கள் தான் நீங்கள். இறைவன் இருக்கிறான், சற்று யோசித்து பாருங்கள் எத்தனை மாணவர்கள் அந்த நாட்களில் நிம்மதியில்லாமல் இருந்திருப்பார்கள்;?
இன்று சில வடிகட்டிய படித்த முட்டாள்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முனைந்தும் கத்தரிக்காய் முற்றி சந்தைக்கு வருவது போல் அம்பலமாகியது ஓர் உண்மை. அதனை இத்துடன் இணைக்கிறோம் அந்த படித்த முட்டாள்களிற்காகவும் கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கும் பெருந்தகைகளின் பார்வைக்காக. எழுத்துகளில் சிறுமாற்றம் செய்த அவன் மற்றைய மாணாக்களை வேறு ஒரு ஜீவன் என நினைத்தான் போலும் கணக்கீட்டு செம்மையாக்கல்கள் கூட மாறவில்லையே ஐயா!!!!!
CEETS நிறுவனத்தால் நடத்தப்பட்ட பொருளியல் நான்காம் தவணைப் பரீட்சை வினாத்தாள் 2016 உயர்தர மாணவர்களுக்கு சிங்களமொழி மூலம் வெளிவந்த (வட்ஸ்ப் இல்) வினாக்கள் மொழி பெயர்க்கப்பட்டு அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரபல பொருளியல் ஆசிரியர்களால் கருத்தரங்கு மூலம் நடாத்தப்பட்ட வினாக்கள் எந்த விதமான மாற்றமுமில்லாமல் CEETSநிறுவன பொருளியல் வினாத்தாளில் வந்திருப்பது மாணவர்களை ஏமாற்றும் செயலல்லவா? இக்கருத்தரங்கு வினாத்தாள் நான்காம் தவணைப் பரீட்சை எழுதிய 2017 உயர்தர மாணவர்களிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இப்பரீட்சையினால் மாணவர்களை எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியும்.
இதனை தட்டிக்கேட்டால் பாடசாலையை விட்டும் துரத்தல், வண்மையான கண்டிப்பு, மனத்தாக்கம் என பாடவேளை கட் அடிப்பு உடனடி நடவடிக்கை வேண்டும் உங்கள் சார்பிலிருந்து. நீங்கள் பொடுபோக்காக இருக்கும் ஒவ்வோர் நிமிடமும் நீங்கள் பெற்றாரின் அளவில்லா ஆத்திரத்தையும் சினத்தையும் சம்பாதிக்கிறீர்கள் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் மிக குறுகிய காலப்பகுதிக்குள் இந்த அப்பட்டமான பரீட்சை மோசடி சம்பந்தமாக உங்கள் பாடசாலை நிருவாகம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையாயின் நீங்கள் எங்கெல்லாம் சென்று கை நனைத்தீர்களோ, அங்கெல்லாம் கால் கடுக்க நிற்க நேரிடும் என எச்சரிக்கை செய்கிறோம்.
மேலும் இந்த மோசடி சம்பந்தமான உங்கள் ஆழ்ந்த கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் அத்துடன் நீங்கள் எடுக்கும் நடவடிக்கையும் எங்கள் முன் புலப்பட வேண்டும். ஊரிலுள்ள பெருந்தகைகள் உலமா சபையினர் அநியாயத்திற்கு துணை போன சக பாடசாலை அதிபர்கள் எல்லாம் ஒன்று பட்டு முடிவெடுங்கள் மற்றுமொறு நான்காம் தவணை பரீட்சை நடாத்துவதா? அல்லது..................! மூடிக்கொண்டிருப்பதா என..!
இந்த நினைவூட்டல் மடலையும் குறித்த பரீட்சை, மாதிரி பரீட்சை, வினாத்தாள்களையும் இவ்வூர் பெருந்தகைகளுக்கும் ஊடக நண்பர்களுக்கும் குறிப்பாக அன்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றார்களுக்கும் அனுப்பி வைக்கிறோம் உங்களுக்கோர் பாடம் புகட்ட!! வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலேயே........... சும்மாவா சொன்னாங்க???அல்லாஹ் மிகப்பெரியவன் ...... அவனைப்பயந்து கொள்ளுங்கள்..
இப்படிக்கு
மாணவர் சமூகம்
மாணவர் சமூகம்