கவிஞர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் 'நான் எனும் நீ' எனும் தலைப்பில் 1996 இல் ஒரு கவிதை எழுதினார். கவிஞர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 'நீ எனும் நான்' எனும் தலைப்பில் 1998 இல் ஒரு கவிதை எழுதினார்.
'நான் எனும் நீ'
'நீ எனும் நான்'
இந்த இரண்டு கவிதைத் தலைப்புக்களையும் முன் வைத்து எழுதப்பட்ட கவிதை இது.
நான் எனும் நீயும்
நீ எனும் நானும்
================
'நான் என்னும் நீ'
என்றார் அஸ்ரஃப்
'நீ என்னும் நான்'
என்றார் ஹக்கீம்
நான் நீயாக முடியுமா?
என்றார் அஸ்ரஃப்
நீயாக நான் ஆவேன்
என்றார் ஹக்கீம்
நான் நானேதான்
என்றார் அஸ்ரஃப்
நீ நானும் தான்
என்றார் ஹக்கீம்
நான் ஆகி நீ ஆகி நாமாவோம்
என்றார் அஸ்ரஃப்
நாம் ஆகி நமதாகி நலமாவோம்
என்றார் ஹக்கீம்
நமதாகி வளமாகி களமாவோம்
என்றார் அஸ்ரஃப்
களமாகி குலமாகி பலமாவோம்
என்றார் ஹக்கீம்
பலமாகி பணியாகி கனியாவோம்
என்றார் அஸ்ரஃப்
கனியாகி கருவாகி மரமாவோம்
என்றார் ஹக்கீம்
மரமாகி நிழலாகி மனையாவோம்
என்றார் அஸ்ரஃப்
மனையாகி துணையாகி இணையாவோம்
என்றார் ஹக்கீம்
இணையாகி அணையாகி
இருவரும் ஒருவராகி
பிணையாவோம் என்றார் அஸ்ரஃப்
பிணையானார் முனையானார்
பிடிப்பானார் துடிப்பானார்
படிப்பானார் அப்பெரியார்கள்
அஸ்ரஃப் ஹக்கீம் பெயர் வாழி!
அவரிருவர் குறி வளர்க நீழி!
கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன்.
