மாவீரர்கள் தினம் - ராவணா பலய எச்சரிக்கை

டக்கில் சிறப்பாக இடம்பெற்ற உயிரிழந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை நினைவு கூரும் மாவீரர்கள் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் எவ்விதமாக அமைய போகின்றது என கேள்வி எழுப்பியுள்ள ராவணா பலய, நாட்டை துண்டாடும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசயிலமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

ராவணா பலயவின் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாது தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறுகையில்,

வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனிக்கின்ற நிலையில் தென்னிலங்கையில் சிறிய சம்பவம் என்றாலும் கைதுகள் இடம்பெறுகின்றன. வடக்கில் 270 திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் காணப்படுகின்றன. அதனை விக்ணேஷவரன் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. அவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கில் காணப்படும் விகாரைகள் தொடர்பில் கண்காணித்து அவற்றை மறுசீரமைத்து விகாராதிபதிகளை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யவிடின் தொல்பொருள் ஆராச்சி தினைக்களத்தினால் அவை ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு அழிக்கப்படலாம்.

மேலும் மாவீரர் அனுஷ்டிப்புகளில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாட்டினையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -