ஏ.எஸ்.எம்.ஜாவித்-
நம்நாடு நற்பணிப் பேரவை ஏற்பாட்டில் 14வது தடவையாக நடைபெறும் நகைச்சுவை சங்கமம் எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு-12, ஹோட்டல் பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள 14வது நகைச்சுவை சங்கமமானது சிரிப்பதற்கா? சிந்திப்பதற்கா? என்ற தலைப்பில் சிரிப்புப் பட்டிமன்றமாக நடைபெறவுள்ளது. போட்டியின் நடுவராக சமூகஜோதி றபீக் கடமையாற்றுவார்.
இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுள்ளனர்.