றிதிதென்னை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு தண்ணீர் வழங்கி வழங்கிவைப்பு


பொலநறுவை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையிலுள்ள கிராமமான றிதிதென்னை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது சொந்த நிதியிலிருந்து தண்ணீர் வழங்கி ஒன்றினை (Water Dispenser) (2016.11.28ஆந்திகதி - திங்கட்கிழமை) வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மட்/மம/ ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம். முஹாஜிரின், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாக சபையின் தலைவர் எம். சமட் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


கடந்த (2016.10.26ஆந்திகதி - புதன்கிழமை) றிதிதென்னை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாக சபையின் அழைப்பின்பேரில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பள்ளிவாசல் மற்றும் மையவாடிக்கான சுற்றுமதில்கள் என்பனவற்றை அமைத்துத்தருமாறும், பள்ளிவாசலுக்குச்செல்லும் பிரதான பாதையினை புனர்நிர்மானம் செய்துதருமாறும், ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் தண்ணீர் வழங்கி என்பனவற்றை பெற்றுத்தருமாறும் பள்ளிவாசல் நிருவாக சபையின் தலைவர் எம்.சமட் கோரிக்கைகளை முன்வைத்தார்.


இவ்விடயங்களை கருத்திற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் எதிர்காலத்தில் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்துதருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தனது 2017ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து ஒலிபெருக்கி சாதனங்களை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்ததோடு, தனது சொந்த நிதியிலிருந்து முதலாவது தேவைப்பாடாக தண்ணீர் வழங்கியினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -