சாய்ந்தமருது தோணா விவகாரம் : ஹக்கீமிடம் சாய்ந்தமருது ஷூரா சபை வலியுறுத்தல்

அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தியில் வெளிப்படைத்தன்மையும் துறைசார் நிபுணர்களின் பங்குபற்றுதலும் அவசியம் பேணப்பட வேண்டும் என நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் சாய்ந்தமருது ஷூரா சபை வலியுறுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சாய்ந்தமருது ஷூரா சபை நிறைவேற்றுக் குழுவில் இவ்விடயம் ஆராயப்பட்டு, எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைச்சருக்கு தன்னால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதத்தில் இதனை வலியுறுத்தியிருப்பதாக அதன் தலைவர் டாகடர் எம்.ஐ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

"சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்காக நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 162 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை சென்ற காலங்களில் இடம்பெற்றது போலல்லாமல் இம்முறை இவ்வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடனும் இப்பிதேசத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களின் பங்குபற்றுதலுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வேலைத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்களும் அவற்றுக்கான நிதி ஓதுக்கீடுகள் பற்றிய விபரங்களும் மக்கள் பார்வைக்கு இலகுவாகக் கிடைக்க வேண்டும.

ஏற்கனவே ஜெய்கா திட்டத்தில் உள்ளவற்றிற்கு மேலதிகமாக பல வேலைகள் தற்காலத்தில அவசியமாக உள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தோணாவை ஊடறுத்துச் செல்லும் பாலங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே இவை போன்ற பல விடயங்கள் தொடர்பாக தோணா சுற்றுச்சூழலில் வாழும் மக்களுடனும் அக்கறையுள்ளவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, அவர்களது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு, குறித்த திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒதுக்கப்பட்ட நிதியில் ஒவ்வொரு ரூபாவும் ஆக்கபூர்வமாக செலவு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் இத்தோணா காரைதீவு பிரதேசத்துடன் தொடர்புபட்டுள்ளதால் காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தினர் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் போன்றோருடன் கலந்துரையாடி, இன நல்லுறவுக்கு பங்கமேற்படாமல் குறித்த வேலைத் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எமது ஷூரா சபை, அமைச்சரைக் கோரியுள்ளது" என்று டாகடர் எம்.ஐ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -