எலிகளின் தொல்லை தாங்க முடியலப்பா..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் உளநலப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் எலிக் கடிக்கு உள்ளாகி வருவதாக நோயாளர்களும் அவர்களது உறவினர்களும் விஷனம் தெரிவிக்கின்றனர்.

உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்ற வேளை எலிக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதினால் சிகிச்சை பெற வந்தவர்கள் இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாளுக்கு நாள் உளநலப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் எலியின் தாக்குலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன் அக்களத்தை சுற்றி களஞ்சியசாலை இருப்பதாகவும் களஞ்சியசாலை சிறந்த முறையில் பராமரிக்கப்படாத நிலையில் எலிகள் கூடிக்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் 

எனவே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்   நோயாளர்களின் விடயத்தில் அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் நோயாளர்களும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -