முஸ்லிம்களை சவுதிக்கு அடித்து கலைக்க வேண்டும் - என்கும் ஞானசார

ஷரியா சட்டம் தொடர்பில் பேச வேண்டும் என்றால் தயவு செய்து முஸ்லிம்கள் சவுதிக்கு அரேபியாவுக்கு செல்லுங்கள் என பொது பல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார்.

நேற்று (2) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”எதிர்வரும் தினங்களில் ஷரியா சட்டம் தொடர்பில் போராட்டம் ஒன்றை தௌஃபிக் ஜமாத் அமைப்பு மேற்கொள்ள உள்ளதாக நான் பத்திரிகையில் பார்த்தேன். இந்த நாட்டில் உள்ள சிங்கள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவர்களை அடித்து கலைத்து விட வேண்டும்.

முஸ்லிகள் ஷரியா சட்டம் பற்றி பேச வேண்டும் என்றால் தயவு செய்து சவுதி அரேபியாவுக்கு செல்லுங்கள் மாறாக இங்கு வந்து உங்கள் ஷரியா சட்டம் பற்றி பேச வேண்டாம். வாகனத்திற்கு டிண்டெட் செய்ய வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலில் அவர்களுக்கு சட்டம் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும்.

முகம் தெரியாத அளவுக்கு முஸ்லிம் பெண்கள் மறைத்து கொண்டு செல்கின்றனர். செல்வது அம்மாவா மகளா என்று கூட அடையாளம் காண முடியவில்லை.

முதலில் இது சம்பந்தமாக பார்க்காமல் வாகனத்திற்கு டிண்டெட் செய்து உள்ளதை பிடிப்பதற்கு வருகின்றார்கள். இந்த நாட்டில் பைத்திய சட்டம் உள்ளது போல தெரிகின்றது. இந்த பொலிஸார் வடக்கில் நன்றாக அடி வாங்கி கட்டுகிறார்கள் ஆனால் இங்கு வந்த எங்கள் சிங்களவர்கள் மீது சட்டம் பேசுகின்றார்கள்” என காரசாரமாக பேசியிருந்தார் ஞானசார தேரர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -