அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

அபு அலா -

ட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று பாடசாலையின் அதிபர் ஏ.எல்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ், வைத்தியர் எம்.ஜே.ஹசான், அதிபர்களான எம்.ஏ.அன்சார், யாசின் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இங்கு சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில்,

ஆசிரியர்கள் எப்போதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களுக்கான மதிப்பையும் மரியாதையும் நாம் எப்போதும் வழங்கியே ஆகவேண்டும். நாம் எல்லோரும் இன்று ஒரு உயர் பதவியில் இரிக்கக் காரமாக அமைந்தவர்கள் இந்த ஆசிரியர்களே என்பதை அறிந்து கொள்ளவேண்டும். 

எமது பிள்ளைகள் வீட்டில் இருப்பதை விட மிக அதிகமான நேரம் பாடசாலையிலும் பிரத்தியோக வகுப்புக்களிலுமே தங்களின் நேர காலங்களை செலவு செய்து வருகின்றனர். எம் பிள்ளைகளை ஒரு நல்ல பிரஜையாகவும், சமூத்தில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய வகையில் அவர்களுக்கான ஒழுக்கம் மற்றும் கல்வி போன்ற பல செயற்பாடுகளை வழங்குவதற்காகவேண்டி அரும் பாடுபடுகின்றவர்களாகவும், அவர்களின் கஷ்டங்களை தாங்கிக்கொண்டு மிகப் பொறுமையாக இருந்துகொண்டு வருகின்றனர். இவர்களை நாம் பாராட்டுவதில் எவ்வித கவலையும் கொள்ளத்தேவையில்லை என்றார்.

அத்துடன் இந்த வித்தியாலயத்தில் விஷேட தேவையுடையவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் இங்கு இடம்பெறுகின்றது. சாதாரண மாணவர்களை விட இந்த மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது மிகக் கஷ்டமான விடயமாகும். இந்த ஆசிரியர்கள் எவ்வளவோ பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதை நாம் சற்று கவனத்திற்கொள்ளவேண்டும் என்றார்.

இந்த விழாவில் ஆதிபர், ஆசிரியர்கள் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பாராட்டி பணப் பரிசில்களுடன் பதக்கங்களும், கற்றல் உபகரணங்களும், ஞாபகச் சின்னங்களையும் வழங்கி வைத்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -