அரசியலால் எல்லா விடயங்களையும் சாதிக்கவும் முடியாது -ஷிப்லி



எம்.ரீ. ஹைதர் அலி-
 
ட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/ காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்;

மட்டக்களப்பு மாவட்டத்தைப்பொறுத்த மட்டில் முஸ்லிம்களுடைய கல்வியானது வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதனை கடந்த சில ஆண்டுகளாக அவதானிக்க முடிகின்றது. பெறுபேறுகளை அதிகரிக்கின்ற விடயத்தில் தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பெறுகின்ற பெருபேறுகளையும் பார்க்கின்றபோது சித்தியடைகின்ற வீதங்கள் குறைந்து கொண்டே செல்லுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக வீழ்ச்சியடையுமாக இருந்தால் இந்த நாட்டிலே பல சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இயலாத ஒரு அடிமைச்சமூகமாக மாறுகின்ற நிலைமை எம்சமூகத்திற்கு ஏற்படும்.

அரசியல் அதிகாரம் என்பது நிரந்தரமானதல்ல. அவற்றால் எல்லா விடயங்களையும் சாதிக்கவும் முடியாது. நிருவாக அதிகாரம் மற்றும் அறிவு சார்ந்த விடயங்களில் எமது சமூகம் முன்னோக்கிச்செல்லுகின்றபோதுதான் பேசவேண்டிய இடங்களில் பேசுகின்றவர்களாக நாங்கள் மாற முடியும்.

பெரும்பான்மை சமூகத்தினால் சிறுபான்மை சமூகங்கள் நசுக்கப்படுகின்றபோது பாரிய அளவில் குரல்கொடுத்த சம்பவங்கள் உலக வரலாற்றிலே மிகவும் குறைவாகும். அன்மைக்காலங்களாக ரோஹிங்கிய, முஸ்லிம்கள் மற்றும் ஆபிரிக்க கண்டங்களிலே வாழுகின்ற சமூகங்கள் அடக்கி ஆழப்படுகின்றபோது கல்வி சார்ந்த சமூகம் அங்கு இல்லாததன் காரணமாகவே அச்சமூகத்தைப்பற்றி பேசுகின்றவர்கள் இல்லாமல் போகின்ற சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

2015ஆம் ஆண்டினுடைய கணக்கெடுப்பின் பிரகாரம் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற ஆசிரியர்களுள் 73 சதவீதமானவர்கள் பெண் ஆசிரியர்களும் 27 சதவீதமானவர்கள் ஆண் ஆசிரியர்களுமாகும். மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்களுடைய காலத்தில் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் ஓய்வுபெற்று செல்லவுள்ளனர். அவ்வாறு அவர்கள் செல்லுகின்றபோது பெண் ஆசிரியைகள் 75 அல்லது 80 சதவீதமானவர்களாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு செல்லுமாக இருந்தால் ஆண் பாடசாலைகளை வளர்த்தெடுப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என தனதுரையில் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ். ஏ. மீரான், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -