சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் காலமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன்ஞீவனி இந்திரா ஜயசூரிய லண்டனில் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 40
செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான அவர், பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.
அவர் பல முன்னணி நிதி நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவு சிரேஷ்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார். அவரது மரண சடங்குகள் லண்டனில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.