தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 45 முஸ்லிம் மாவீரர்கள் அடங்குகின்றனர் – யோகேஸ்வரன்

மிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி 45 முஸ்லிம் மக்களும், மாவீரர்களாகி இருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து மண்ணின் விடுதலைக்காக மாவீரர்களாக மாறி தியாகம் செய்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மாவீரர் தின நிகழ்வு நேற்று(27) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சிபுரிந்த அரசாங்கங்கள் தான் தியாகங்களைச் சரியாக மதிக்கவில்லை. இரண்டு நாடுகளுக்கிடையில் நடைபெறுவதுதான் போராகும். ஆனால் உள்நாட்டில் உரிமைக்காகப் போராடுவது பெரிய அளவில் போராகக் கொள்ளப்படுவதில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -