10 இணையத்தளம், பத்திரிகைக்கு வித்திடும் பிரதமர் - கெஹெலிய

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு பில்லியன் ரூபா செலவில் புதிய பத்திரிகையொன்றை ஆரம்பிக்க தேவையான அச்சகமொன்றை அமைத்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் மஹிந்த சார்பு எம்.பி.யுமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நிதியை முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனின் மருமகன் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கண்டி புஷ்பதான பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலுள்ள பிரபல இணையத்தள செயற்பாட்டாளர்கள் 10 பேரை அடுத்த மாதம் நாட்டுக்கு வரவழைத்து, 10 இணையத்தளங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பயண ஏற்பாட்டுக்காக ஹெலிகொப்டர் ஒன்றை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கெஹலிய எம்.பி. தனதுரையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -