10 வியாதிகளுடன் அழையும் ஞானசார - SLTJ

நாட்டில் முஸ்லிம் மக்கள் ஏதாவது செய்தால் ஞானசார தேரருக்கு 10 தோல் வியாதிகள் ஏற்படுகின்றது என தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். SLTJ கட்சியினர் முஸ்லிம் தனியார் சட்டத்தினை ஜி.எஸ்.பி பிளஸ்க்காக திருத்த கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்ததோ, அன்றிலிருந்து முரண்பட்ட கருத்துக்களை அவர் தெரிவித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்தால் எங்களை அடித்து விரட்டுவோம் என ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வந்தால் சட்ட ரீதியான பல விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

ஷரியாச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமாயின், முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -