கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு அனுப்ப வேண்டாம் - அன்வர் MPC அவசர பிரேரணை

திர்வரும் அக்டோபர் மாதம் 6 ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின்போது மாகாண சபையில் அவசர பிரேரணை கொண்டுவரும் மாகாண சபை உறுப்பினர் அன்வர் கிழக்கில் மாணவர்களின் கல்வியில் விளையாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வருடம் கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகல ஆசிரியர்களையும் எக்காரணம் கொண்டும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் வழங்கி அனுப்பவேண்டாம்.

கிழக்கு மாகாணத்தில் இன்று 1108 பாடசாலைகளில் 5022 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படும்போது இம்மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வெளினாகாணத்துக்கு செல்வதை அனுமதிக்க மிடியாது. உதாரணம் நேற்று 03.10.3016 இறக்காமத்தில் 6 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக எனவே இது யாருடைய பிழை இப்படியான வெற்றிடங்கள் உடனடியாக நிறப்பவேண்டும் கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சியை கொண்டுவர ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் கிழக்கில் இருந்து செல்லும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் கற்கும் மாணவர்கள் தேசத்தில் முதலிடம் பெறும்போது குறிப்பிட்ட ஆசிரியர்களின் ஊர்களில் பரீட்சைகளிப் பெறுபேறுகளோ மிகவும் மோசம். 

எனவே இவ்வருடம் கல்விக்கல்லூரிகளில் இருந்து வெளியேறிய சகல ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிக்க கல்வி அமைச்சு மற்றும் முதலமைச்சர் இணைந்து அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -