கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஆளுனருக்குமிடையிலான உறவினை விரிசலை மாற்றியமைத்தது ஊடகமே என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தெரிவித்தார்.
இலங்கை பத்திரிகைப் பேரவையும்,பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சும் இணைந்து நடாத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டரை இன்று சனிக்கிழமை (1) திருகோணமலை ஜேகாப் பார்க் விடுதியில் விடுதியீல் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
புதிய இலங்கை நாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாடு நல்லாட்சியை நோக்கி செல்கின்றது. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதும் அப்போது பல செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது,அதேபோன்று தான் அண்மையில் சம்பூர் பிரதேசத்தில் கடற்படைபடையினரால் ஏற்பட்ட அந்த கசப்பான சம்பவம் சமூகவலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்து கொண்டே இருந்தது.
இப்படியாக இருந்தால் எப்படி நல்லிணக்கம், மீள்குடியேற்றப்பணிகள் சிறப்பாக நடைபெறும். இன்று சில ஊடகங்கள் கழுவதும் துடொப்பதும்,இது தான் சேவையாக இருந்து கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்படல் வேண்டும், அத்தோடு நமது நாட்டினையும், இராணுவத்தினரையும் சர்வதேசத்தில் புதைக்கும் செயற்பாடுகளும் முன்பு நடைபெறுவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.இது முற்றாக தடைசெய்யப்பட்டதோடு ஊடகங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றார்.