ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்-
42வது தேசிய விளையாட்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வில் இடம்பெற்ற ஆண்களுக்கானகூடைப்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண அணியினை எதிர்த்து வடமாகாண அணி மோதியது.
யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் வீரர்கள்அறிமுக நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இப்போட்டியில் இரு அணிகளும் தங்களது வெற்றிக்காக பலப்பரீட்சையில் ஈடுபட்டது.ஆதரவாளர்களின் கரகோசத்ததால் அரங்கமே அதிர்ந்தது. இவ் அரை இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண அணி 64 புள்ளிகளையும் வட மாகாண அணி61 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. கிழக்கு மாகாண அணி மேலதிக 3 புள்ளிகளால்வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற கிழக்கு மாகாண அணி வீரர்களுக்கு கைளாகு கொடுத்து பிரதி அமைச்சர்;ஹரீஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.