பறக்கும் விமானத்தில் பாலியல் விருந்து : விமான நிறுவனம் சிக்கலில்

பிரபல விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் விமானப் பணிப் பெண்களும் ஊழியர்களும் ஒன்றிணைந்து பாலியல் விருந்துகள் மேற்கொண்டு வந்துள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Transavia விமானங்களில்தான் விமானப் பணிப் பெண்களும் ஊழியர்களும் ஒன்றிணைந்து பல ஆண்டுகளாக பாலியல் விருந்துகள் மேற்கொண்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கேளிக்கை விருந்துகள் குறித்து விமான ஊழியர் ஒருவர் விடியோ பதிவு எடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி விமானப் பணிப் பெண்கள் ஊழியர்கள் மீது மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு பழகுவதை பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குறிப்பிட்ட விமானப் பணிப் பெண்கள் பறக்கும் விமானத்தில் விமானிகளில் அறையில் வைத்தே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட விமானப் பணிப்பெண் ஒருவர் மேற்கொண்ட வீடியோ பதிவானது அவரது கணவரால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த பாலியல் விருந்து சம்பவம் தற்போது வெளிவரத் துவங்கியது.

அந்த நபர் இந்த விவகாரத்தை மொத்தமும் வெளிவிடுவேன் என மிரட்டியதை தொடர்ந்து குறிப்பிட்ட விமானப் பணிப்பெண் அந்த ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு விடுவதில் இருந்து விலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் சில ஊடகங்கள் வாயிலாக குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி, அதில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைக்கு ஏர் பிரான்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மட்டுமின்றி குறிப்பிட்ட சம்பவங்களின் போது பயணிகளின் உயிருக்கு ஆபத்தான கட்டங்கள் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -