இலங்கையில் புதிதாக 12 விமான சேவைகளை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது.
குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் மிஹின் லங்கா விமான சேவைகளை ஸ்ரீலங்கா விமான சேவைகளுக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதைத் தொடர்ந்து மிஹின் லங்கா நிறுவனம் நடத்திய சேவைகள் நேற்று டன் நிறைவுக்கு வந்தன. இந்நிலையில் மிஹின் லங்கா நிறுவனம் நடத்தி வந்த ஸீஸஸ், மஸ்கட், பஹ்ரேன், டாக்கா, சென்னை மற்றும் கல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களுக்கான விமான சேவைகளை இன்று முதல் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.