புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியடையும் என இரகசியமான முறையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 7 வீத வாக்குகளும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 30 வீத வாக்குகளும் என மொத்தமாக 37 வீத வாக்குகளே கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காது என்ற காரணத்தினால், சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிப்பெற சிறுபான்மை இன பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சு வார்த்தைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள பிரதமர், அடுத்து வரும் நாட்களில் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன், பழனி திகாம்பரம், வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.