எப்.முபாரக்-
அதி சக்தி வாய்ந்த டீ.என்.ரீ என்று அழைக்கப்படும் வெடி பொருள் மருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை (17) உத்தரவு பிறப்பித்தார்.
அத்தோடு இவ் வெடிமருந்து விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வவுனியா பகுதியைச் சேர்ந்த நாள்வரை வவுனியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.இவர்கள் நாள்வரையும் எதிர் வரும் 31 ஆம் திகதி மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென நீதிவான் பொலிஸாருக்கு உத்தர பிறப்பித்தார்.