எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பையின் பணிப்புரைக்கமைய சம்புக்களப்பு பிரதான வாய்க்கால் துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்வரும் மாரி காலத்துக்கு முன்னர் சம்புக்களப்பு வடிச்சல் பிரதான வாய்க்கால் துப்பரவு செய்யப்பட வேண்டுமென உதுமாலெப்பை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கினங்க சம்புக்களப்பு பிரதான வாய்க்கால் துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் நேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ஐ. மயூரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸ்மாயீல் ஆகியோர் குறித்த வேலைத்திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.