எம்.வை.அமீர்-
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் பல்வேறு நிகழ்வுகள் 2016-10-01ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீனும் பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.பி.முஜீன் , உதவி அதிபர்களான எம்.எச்.எம்.அபுபக்கர், எம்.ஏ.சலாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டதுடன் சிரேஸ்ட ஆசிரியர் அல்ஹாஜ் எஸ்.எச்.ஏ. ஹக்கீம் சிறுவர் தினம் பற்றிய விசேட சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தரும் போது இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன்விசேட காலை ஆராதனையும் இடம்பெற்றது. மேலும், விழிப்புணர்வு ஊர்வலம் , கயிறுழுத்தல் , துவிச்சக்கரவண்டி ஓட்டம் ,சித்திரப்போட்டி , பரிசில் வழங்கல் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் மாணவர்களுக்கிடையிலான கிறிக்கட் போட்டியொன்றும் இடம்பெற்றது.