அமைச்சர் றிசாத்தினால் நிந்தவூரில் பிஸ்கட் நிறுவனம் திறந்து வைப்பு..!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் பிரதான வீதியில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள 'மியாமி ஸ்னேக்' பிஸ்கட் நிறுவனம் நிந்தவூரில் திறந்து வைக்கப்பட்டது. றீமா பிஸ்கட், மியாமி ஸ்னேக் ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.சி.எம்.சுபையீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும், வர்த்தகக் கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மியாமி ஸ்னேக் பிஸ்கட் உற்பத்திச் சாலையைத் திறந்து வைத்தார்.

முன்னாள்; தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வீ.சீ.இஸ்மாயீல், பிரபல நாடக ஆசிரியரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி. எஸ்.முத்துமீரான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுபைதீன் ஹாஜியார், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஏ.எச்.சித்தீக் காரியப்பர், சுஹைப்.எம்.காஸீம் உள்ளிட்ட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

இதே வேளை நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளி வாசல் நிருவாகத்தினரும், ஊர்ப்பிரமுகர்களும் அமைச்சரை வரவேற்று, பிரதேசத்திலுள்ள பல பிரச்சினைகள்; பற்றிக் கலந்துரையாடினர்.

முக்கிய பிரச்சினையாக ஒலுவில் துறைமுகமும், அருகிலுள்ள பிரதேசங்களிலான மண்ணரிப்பும் எடுத்துக் சூறப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைத் திரட்டி, அவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்க ஆவன செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடல் நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தலைமையில் பள்ளிவாசல் நிருவாகக் காhரியாலயத்தில் இடம் பெற்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -