மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதற்கான ஞானம் எனும் விளக்கை ஏற்றிக்கொள்ள அனைவரும் தீபாவளித் திருநாளை ஓர் முன்மாதிரியாக்கொள்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த தீபாவளி திருநாள் இருளைத் தோற்கடித்து மனிதன் நல்வழியில் செல்வதன் முக்கியத்துவத்தினையும், ஒழுக்க விழுமியங்கள், நீதி, நியாயம் நிலைத்தோங்கும் சமூகமொன்றினைக் கட்டியெழுப்பப்படுவதன் தேவையினையும் மீண்டும் எமக்கு நினைவூட்டுகின்றது எனவும் தனது நீண்ட வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்