மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் நஸீரின் உத்தரவு..!

பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்-
2016 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 356 மில்லியன் ரூபா நிதியில் அம்பாறை, தெஹியத்தக்கண்டி வைத்தியசாலையில் 56 மில்லியன் ரூபா நிதியில் சிறுநீரக நோயாளர்களை இனங்காணும் அலகு ஒன்றை அமைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (03) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி அவர்களின் விசேட கவனத்தின் அடிப்படையில் தெஹியத்தக்கண்டி பிரதேசத்தில் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்துவதுடன் 65 ஆயிரம் அளவிலான சனத்தொகை கொண்ட இப்பிரதேச மக்களில் 10 ஆயிரம் பேரை பரிசீலனை செய்த பின்னர் அதில் 1200 பேர் சிறுநீரகம் சார்ந்த நோயாளராக இனம்காணப்பட்டுள்ளனர். அதற்கமைவாகவே குறித்த சிறுநீரக நோயளர் அலகு அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போது அம்பாறை பிராந்தியத்திற்குட்பட்ட அம்பாறை வைத்தியசாலையில் சிறுநீரக நோய்களை பரிசோதிக்க 08 இயந்திரங்கள் உள்ளதகவும் இன்னும் புதிய இரண்டு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு நாளாந்தம் சுமார் 12 நோயாளர்கள் இலவசமாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதற்காக செலவிடப்படுகின்ற தொகை ரூபா 6000 எனவும் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றவர்கள் 26 வயதிற்கும் 27 வயதிற்கும் இடையிலான இளைஞர்களே அதிகமாக உள்ளனர். 

இந்நோய்க்கான காரணம் பிரதான காரணம் குடிநீர் எனபதாக கண்டறியப்பட்டதுடன் அயன் அற்ற நீர் பயன்பாட்டின் மூலம் இந்நோயை குறைக்க முடியும் தெஹியத்தக்கண்டி நீர் செயத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் சிறுநீர நோய் அதிகளவு பரவியுள்ள இப்பிரதேசத்திற்கு மிக விரைவில் குடிநீர் செயத்திட்டங்கள் முடியுறுத்தப்பட வேண்டும். - என்றார் 

குறிப்பாக கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் மிக விரிவாக ஆராய்ப்பட்டது. இதில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சரியான நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.ஐ. மன்சூர் முன்வைத்ததை அடுத்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தொடர்பில் விரிவாக ஆராய்ப்பட்டு அவ்விடத்திலையே சுகாதார அமைச்சரினால் தீர்வும் எடுப்பட்டு குறித்த வைத்தியசாலை தொடர்பாக ஆராயும் கூட்டத்தை நாளை (04) கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக் காரியாலயத்தில் நடாத்த ஏற்பாடு செய்யமாறும் குறித்த பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல். அலாவுத்தீனுக்கு உத்தரவிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -