பாறுக் ஷிஹான்-
மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் ,அரபுக்கல்லூரி என்பவற்றிற்கு நிதியுதவிகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸ் வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினரின் இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து எருக்கலம்பிட்டி காட்டுபாவா சின்னப்பள்ளிவாசலுக்கு 250,000/-யும் எருக்கலம்பிட்டி சஈதிய்யா அரபிக் கல்லூரிக்கு 250,000/- யும் அடம்பன் ஜும்மா பள்ளிவாசலுக்கு 200,000/-யும் மாகாண சபை உறுப்பினர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிதிக்கான காசோலை அண்மையில் நிர்வாக பிரதிநிகளிடம் மாகாண சபை உறுப்பினரால் கையளிக்கப்பட்டது.