ஷபீக் ஹுஸைன் -
மஹியங்கனை - பங்கரகம்மான குடி நீர் வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (29) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதுளை மாவட்ட உயர்பீட உறுப்பினர் தாஜுதீன் மற்றும் மஹியங்கனை அமைப்பாளர் ஷெகுதீன் மெளலவி ஆகியோரது வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சினூடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டதினூடாக பங்கரகம்மான, ரோகன, தம்பகொள்ள, எட்டாம்வீடு ஆகிய பிரதேசங்களில் சுமார் 800 குடும்பம்பங்கள் பயனடையவுள்ளனர். இத்திட்டத்திற்கு 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாண சபை உறுப்பினர் உபாலி சேனாரத்ன உட்பட அரசியல் பிரமுகர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.