கட்டாரில் குப்பை தொட்டியில் பச்சிழம் பாலகன் குழந்தையின் தாய் யார் அலசல் -கேவலத்தின் கொடூரம்

கட்டாரில் இருந்து தெளபீக்,யாசிர்-

ட்டார் நாட்டின் முஅய்தர் (மைதர்) பிரதேசத்தில் உள்ள குப்பை தொட்டி ஒன்றினுள் மட்டைப் பெட்டியினுள் வைக்கப்பட்டு பொலித்தீன் பையினால் கட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம் (01.10.2016) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சுபஹு தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் குப்பை தொட்டியினுள் இருந்து குழந்தை அழுவதைப் போன்ற ஓசையை கேட்டதும் அங்கு சென்று பார்த்த போது குப்பையோடு குப்பையாக கட்டப்பட்டு பிறந்த உடன் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் வீசப்பட்ட ஆண் குழந்தை ஒன்றை கண்டதை தொடர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.

உடனடியாக வைத்திய குழுவினர் சகிதம் குழந்தையை மீட்டெடுத்த பொலிசார் சிகிச்சை மற்றும் பராமரிப்பின் பொருட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் விசாரணைகளையம் ஆரம்பித்துள்ளனர்.



வளைகுடா நாடுகளுக்களுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் ஒரு சிலரின் கேவலம் இங்கே கொலைசெய்யும் நிலைக்கு வந்துள்ளமையை யாரால் தாங்கிக் கொள்ள முடியும். 

நாட்டில் குடும்ப சூழ்நிலை கருதி சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப் பட்டு உழைக்கின்றனர். 

இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்று கணவன் பிள்ளைகளை தவிக்க விட்டு தங்களை விற்றுப்பிழைக்க வெளிநாடு செல்கின்றனர்.
இப்படியான கேவலங்களின் வெளிப்பாடாகவே இங்கு வீசப்பட்ட குழந்தையின் நிலையும் உருவாகியுள்ளமையை யாராலும் மறுக்க முடியாது. அதற்கான சான்றுகளும் பல உள்ளன.

எனவே வெளிநாடுகளுக்கு பணிபெண்களாக செல்வோரை முற்று முழுதாக இடைநிறுத்தாதவரை இப்படியான அநியாயங்கள் நடப்பதை தடை செய்ய முடியாது என்பது உண்மையான விடையம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -