இந்தியாவின் ஒடிசா மருத்துவமனையின் ஐ.சி.யூ,வில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் மருத்துவ அறிவியல் மைய மருத்துமனையில் (இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்) இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப்பிரிவு (ஐ.சி.யு) அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து பக்கத்து அறைகளுக்கும் தீ பரவியது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து, 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஒடிசா தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.