அக்கரைப்பற்று ஐச் சேர்ந்த எம்.ஐ.எம். நிசாம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர் பரீட்சையில் அதி விசேட சுப்றா சித்தியடந்துள்ளார்.1984 ம் ஆண்டில் அரசாங்க சேவையில் போட்டிப் பரீட்சையின் வாயிலாக இணைந்து கொண்ட இவர் சுகாதாரத் திணைக்களத்தில் பல வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
கடந்த பத்து வருடகாலமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வைத்தியசாலையின் பரிணாம வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்த இவர் இன்று 08 முதல் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தராக ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம் . ஜவாஹீர் முன்னிலையில் உத்தியோக பூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் அலுவலர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.