பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முந்திய செய்தி:-
முந்திய செய்தி:- துமிந்த சில்வா வருகை....
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று 8ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றிற்கு வருகைத்துந்துள்ளார்.
முந்திய செய்தி:-
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (08) வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான வழக்கின் சாட்சிகள் பல வருட காலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதன் இறுதித் தீர்ப்பே இன்று வழங்கப்படவுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இச்சம்பவம் கடந்த 2011 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் தினத்தன்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.