திங்கள் இரவு ஏழு மணியளவில் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கட்டைவேலி பகுதியைச்சேர்ந்த செந்தூரன் எனப்படும் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 35 வயதான வைத்தியரே இவ்வாறு உயிரழந்தார்.
பிஞ்சுக்குழந்தையின் மழலை மொழி கேட்டு புறப்பட்ட கணவன் பிணமாக வந்ததை யார் தான் ஏற்றுக்கொள்வார்??
இதில் யார் சரி, யார் தவறு என்பதற்கு அப்பால் இறுதியாக இழப்பை சந்தித்த உறவுகளுக்கு பதில் தான் என்ன???
வேலைக்கு செல்கிறேன்!! அங்கு எனக்காக காத்திருக்கும் கடைமைகளை செவ்வனே செய்யவேண்டுமென்ற அந்த உயரிய நோக்கத்துடன் வந்த வைத்தியர் குற்றுயிராக வீதியில் கிடந்த துன்பியல் சம்பவம்.
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன??
வீதியால் வாகனம் ஓட்டும் சாரதிகளே சற்று சிந்தித்து பாருங்கள்.
உங்களை கடந்து செல்லும், உங்களுக்கு எதிராக செல்லும் மனிதர்களுக்கு எல்லாம் பாசமிகு உறவுகள் பல இருக்கின்றதென்பதை சற்று சிந்தியுங்கள்.
ஒரு நிமிடத்தில் உங்களது உணர்ச்சிகள் எல்லை மீறுவதால் வாழ் நாள் பூராக தோள் மீது போட்டு அன்புகாட்டும் தந்தையரை இழந்து நிற்கும் அப்பாவி பிஞ்சுகளை நினைத்துபாருங்கள்.
பணத்தை இழப்பீட்டையும் நீங்கள் கொடுக்கலாம்!
பாசம் கொஞ்சி விளையாடும் தந்தையை கொடுக்கமுடியுமா???
தனது அப்பா இறந்துவிட்டார் என்பதை கூட அறியாத பிஞ்சு அப்பாவின் சடலத்தை காட்டி “அப்பா,அப்..பா” என்று செல்லமாக அழைக்கின்ற அந்த கொடிய நிமிடத்தை தாங்கும் மனைவியை நினைத்துபாருங்கள்.
பணம் எல்லோரும் தான் உழைக்கவேண்டும்.ஆனால் பணம் உழைக்கவேண்டுமென்பதற்காக நீங்கள் போட்டிபோட்டு வாகனம் ஓடுவதால் வாழ்க்கையையே இழந்து நிற்கும் குடும்பங்களை பாருங்கள்.
வாழ்க்கை துணையை இழந்து தந்தையை தாயை இழந்து நிற்கும் அந்த குடும்பங்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா??
அவர்களின் வேதனை எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.
வீதியில் நிதானமாக வண்டியை செலுத்துங்கள்.
நீங்கள் போகும் பாதையூடாக செல்லும் அத்தனை உயிர்களும் விலை மதிக்க முடியாதவை என்பதை மனதில் பதித்துகொள்ளுங்கள்.
இது உங்கள் மனச்சாட்சியை தட்டும் ஓர் மழலையின் கதறல்…
கடைமைக்கு சென்று கொண்டிருந்தபோது மிகவேகமாக போட்டிபோட்டு ஓடிவந்த பஸ்ஸில் மோதுண்டு பலியான வைத்தியர் செந்தூரனுக்கு இரங்கல் தெரிவித்து இன்று பல ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆறாத்துயரில் மூழ்கியிருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கு உலகத்தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
“அப்பா” அப்பா….” நீங்க வரமாட்டீங்களா???ஏன் இன்னும் வேலை முடியேல்லையா?????