ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீனுக்கு பாராட்டு மழை..!

ஆதிப் அஹமட்-
கர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்..என்.முபீன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(01.019.2016) அம்பாறை மாவட்ட மக்களுக்கு மிகவும் பிரயோசனமளிக்கக்கூடிய வகையில் நடமாடும் சேவையொன்று அட்டாளை;ச்சேனைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.இந்த நடமாடும் சேவையின் நிறைவு விழாவின் போதே அவர் அங்கு பிரசன்னமாகியிருந்த பல்வேறு அதிதிகளாலும் பாராட்டப்பட்டார்.
அம்பாறை மாவட்ட நடமாடும் சேவையினை மக்கள் மனதை வென்ற மாபெரும் நடமாடும் சேவையாக மிகுந்த சிரமங்களின் மத்தியிலும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காகவே முபீன் அவர்களை அதிதிகள் பாராட்டினார்கள்.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமட் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட பலரும் முபீன் அவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் தங்கள் உரைகளைத் தொடர்ந்தார்கள்.

நிகழ்வின் இறுதியில் முபீன் அவர்களின் இந்த சேவையை கௌரவித்து அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினரால் நினைவுச்சின்னமொன்றும் வழங்கப்பட்டது. இந்நினைவுச்சின்னத்தை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமட் ஆகியோர் கையளித்தார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -