க.கிஷாந்தன்-
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் மாணவிகளில் இரு குழுக்களுக்கிடையில் 26.09.2016 அன்று முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாய்தர்க்கங்களுடாக இடம்பெற்றதாக கூறப்படும் இந்த முறுகல் நிலைமை கல்லூரியின் மாணவிகள் உள்ளக பிரச்சினையாக கருதப்படுவதாக கல்லூரியின் பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்வியற் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு இனங்களுக்கான மாணவிகள் 25.09.2016 அன்று மாலை முதல் அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் மாணவிகளுக்கிடையிலான பகடிவதைகள் தொடர்பிலேயே இந்த வாய்தர்க்கமும் முறுகல் நிலைமையும் ஏற்பட்டிருப்பதாக பீடாதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பில் மாணவிகளுக்கிடையில் விசாரணைகள் மேற்கொண்டதாகவும், இவர்களுக்கிடையில் சமதானத்தை உருவாக்கியிருப்பதாகவும் பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.