மாணவர்கள் தேவையற்ற விடயங்களில் கவனங்களைச் செலுத்துவதைத் தவிர்த்தல் வெற்றியளிக்கும்




இக்பால் அலி-

ல்லாஹ்துஆலா மனிதனுடைய சிந்தனையை ஒரு புனிமான சிந்தனையாகப் படைத்துள்ளான். அதில் பிரயோசமான சிந்தினையெல்லாம் நாங்கள் பதிவு செய்கின்றோம். அவை அனைத்தும் அது உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆனாலும் சில சந்தப்பத்தில் தேவையற்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்தும் போது நாம் பதிவு செய்து வைத்திருகின்ற பிரயோசமான சிந்தனைகள் யாவும் அப்படியே மறந்து போகக் கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் யாவரும் தேவையற்ற விடயங்களில் கவனங்களைச் செலுத்துவதைத் தவிர்த்து நடந்து கொள்ளுதல் வேண்டும் என்று கலாநிதி அஷ்ஷெய்க் அம்ஜத் ராசிக் தெரிவித்தார்.

பறகஹதெனிய தேசிய பாடசாலையில் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு பறகஹதெனிய தேசிய பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பாயிஸ்னா தலைமையில் 13-08- 2016 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம வளவாளராகக் கலந்து கொண்ட கலாநிதி அஷ்ஷெய்க் அம்ஜத் ராசிக் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் தேவையற்ற ஓசைகள்ரூபவ் தேவையற்ற பார்வைகள் போன்ற விடயங்களிலிலிருந்து தங்களுடைய
உருப்புக்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். தூர விலகி நிற்றல் அவசியமாகும்.
தேவையற்ற விடயங்களில் கவனத்தைக் கொள்ளும் போதே தான் சிந்தனையில் பதிவு செய்து வைத்துள்ள பிரயோசமான விடயங்கள் அப்படியே மறந்து போகக் கூடிய நிலையில் உள்ளன. 

இதனை நீங்கள்
மட்டுமல்ல உங்கள் குடும்பத்தவர்கள் சுற்றுச் சூழலிலுள்ளவர்கள் தவிர்த்து நடத்தல் வேண்டும். குறிப்பாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பெற்றோர்களின் ஆதரவுடன் அர்ப்பணிப்போடும் இடையறாத ஊக்கத்தோடும் கல்வி கற்ற சிறார்கள் தம்முடைய
சிந்தனையில் பதிவு செய்த விடயங்கைள தக்க வைத்துக் கொள்ளுவதே சிறந்த பலமாகும். 

முதலில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தல் வேண்டும். எத்தகைய சிந்தனைகளைப் பதிவு செய்தாலும் நாம்
அல்லாஹ்வின் ஆசீர்வாதத்துடன் தோற்றுகின்ற பரீட்சையே வெற்றியைத் தேடித் தரும். பரீட்சையில் ஏதாவது மறதி ஏற்பட்டு விட்டால் அல்லாஹ்வை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். 

அல்லாஹ் நிச்சயமாக உதவி செய்வான். அதேபோல் பெற்றோகள் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக தங்களுடைய சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதில் தாய் தந்தையர்களின் பிரார்த்தனை மிக முக்கியமாக இருந்து கொண்டு இருக்கிறது. இந்தக் காலத்தில் சிறு விடயத்திற்காகக் கூட அவர்களுடன் கோபம் கொள்ள வேண்டாம்.

 பெற்றோர்கள் நல்ல
வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் யாசீம்ரூபவ் இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சல்மான்ரூபவ் ஆசிரியர் ஆலோசகர் சலாஹுதீன்ரூபவ் பாடசாலை
ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -