கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 64 இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லையென பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான செய்தியில், 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் 162 முகாம்கள் காணப்பட்டன என்றும், இதனை ஆகஸ்ட் 31 ஆகும் போது 98 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.