ஆதிப் அஹமட்-
அம்பாறை மாவட்ட மக்களின் பல்வேறு குறைபாடுகளையும் தீர்த்து வைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹகீம் அவர்களின் பணிப்புரைக்கமைய நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சும் கிழக்கு மாகாண முதலமைச்சும் இணைந்து பொதுமக்களுக்கான நடமாடும் சேவையொன்றினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று(26) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினுடைய உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் இந்த நடமாடும் சேவையின் ஏற்பாட்டாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினுடைய இணைப்புச்செயலாளருமன யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
இதன் போது மக்களுடைய பல்வேறு துறைகளானது அடையாளம் காணப்பட்டு தீர்வு வழங்கப்படுவுள்ளதாகவும் அந்த வகையில் ஆட்பதிவுத்திணைக்களத்தினூடாக மக்களுக்கான அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் காணிப்பிரச்சினைகளை இணம் காணுதல் உற்பட பல்வேறு பிரச்சினைளானது தீர்த்து வைக்கப்படுமெனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த நடமாடும் சேவையில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு காணி அமைச்சு புனர்வாழ்வு மீ;ள்குடியேற்ற சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுக்களும் மற்றும் இவ் அத்தனை அமைச்சுpன் கீழான திணைக்களங்களும் கலந்து கொண்டு சேவை வழங்கவுள்ளதாகும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.