திருமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்துவம் வழங்கும் நிகழ்வு..!

எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
திருமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், மூதூர் மற்றும் திருமலை ஆகிய தொகுதிகளுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமாகிய கெளரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களின் தலைமையில் நேற்று (2016.08.20) கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் மாவட்ட இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், கட்சியின் புதிய அங்கத்துவம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் புல்மோட்டை சார்பாக யாசீர் எம் ஹனீபா தலைமையில் இளைஞர் குழு ஒன்று கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்நிகழ்வின் போதான உரையில், புல்மோட்டை உட்பட முழு மாவட்ட இளைஞர்களும் எதிர்கொள்ளும் வேலை இல்லா பிரச்சினைகள், விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கெளரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு கூறப்பட்டதோடு மிக விரைவில் தனது முயற்சி மூலம் குறித்த இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படும் எனவும் அவரால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

"எம் மாவட்ட இளைஞர்கள் எதிர்நோக்கியுள்ள சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் எதிர்காலத்தில் தங்களின் முயற்சி மூலம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற நபிக்கையோடு நாங்கள் உங்களுடன்". என புல்மோட்டை இளைஞ்சர் யாசிர் எம் ஹனிபா தம் உரையில் தெரிவித்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -