”யாழில் அய்யூப் அஸ்மீனுக்கு எதிராக கையெழுத்து வேட்டையும் போராட்டமும் ”

பாறுக் ஷிஹான்-

டக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை சுலோகங்களை ஏந்தியவாறு மேற்கொண்டதன் பின்னர் கையெழுத்து வேட்டையையிலும் இன்று (27) காலை  ஐந்து சந்திப்பகுதியில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினரின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக, தனது சுயநலனிற்காக பாவிப்பதாக குற்றம்  சுமத்ததி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டமானது  இன்று மாகாண சபை உறுப்பினர் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  காலை  நடாத்தவுள்ள யாழ்ப்பாணம்  கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வினை பகிஸ்கரிப்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 வருடங்களாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கிதாக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -