துபாய் விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த எமிரேட்ஸ் விமானத்தின் கடைசி நிமிடங்கள் - திகில் வீடியோ

புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர் தப்பினார்கள். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தது நிம்மதியை அளித்தது.

நேற்று விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் ஏகே521 விமானத்தில் 282 பயணிகளும், 18 ஊழியர்களும் பயணித்துள்ளனர், இவர்களில் 226 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

பயணிகளை விமானத்தில் இருந்து இறங்குமாறு கூறப்பட்டது முதல், விமானம் எரியும் வரையிலான வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், உடைமைகளை எல்லாம் விட்டுவிடுங்கள்… உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே குதியுங்கள் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுவது முதல், விமானத்தின் என்ஜினில் தீப்பிடிப்பது வரை பதிவாகியுள்ளது.

இதுகுறித்து, எமிரேட்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது

திருவனந்தபுரத்திலிருந்து 300 பேருடன் துபை வந்து கொண்டிருந்த ஏகே.521 விமானம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.15 மணிக்கு (இந்திய நேரம்) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை என்றார்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்து காயமின்றி தப்பிய கேரளாவை சேர்ந்த சாய் பாஸ்கர் தனது பயங்கர அனுபவத்தை நிருபர்களிடம் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், விமானம் அவசரமாக தரையிறங்கிய போது முன்பக்க சக்கரம் உடைந்தது. இதனால் விமானம் கிடுகிடுவென ஆட தொடங்கியது. இதனால் நாங்கள் பீதியில் கத்தினோம்.

இதன் பின்னர் விமானம் நின்றதும், உடனடியாக, அவரச வழிப்பாதை வழியாக குதித்து வெளியேறினோம். நான் தான் கடைசியாக வெளியேறிய பயணி என்று நினைக்கிறேன்.

நாங்கள் வெளியேறி ஒரு நிமிடத்திற்குள், விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. இதன் பிறகு புகை மண்டலம் அதிகரித்தது. நல்ல வேளையாக ஒரு நிமிட இடைவெளியில் நாங்கள் உயிர் தப்பினோம்.

புகை மூட்டம் காரணமாக, சில பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆனால் சிறு காயம் இன்றி அனைவரும் தப்பிவிட்டோம். உதவிக்கு கூட யாரும் வரவில்லை. நாங்களாகத் தான் எங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -