மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாடு கொழும்பில்..!

மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு இன்று 04.08.2016 காலை 10 மணிக்கு கொழும்பு நராஹேன்பிட்டி இரத்த வங்கி மாநாட்டு மண்டபத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ண தலைமையில் ஆரம்பமானது.

இம்மாநாட்டில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் சுகாதார அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பங்கேற்று கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் வைத்தியசாலைகளை சரியான முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், பல வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தேவை ஏற்பட்டுள்ளதுடன், ஆளணிப்பற்றாக்குறையும் நிலவுகிறது. எனவே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும், இன்னும் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் அம்பியுலன்ஸ் வாகணங்கள் பலவும் தேவைப்படுவதால் இவ்வருடத்திற்குள் இவைகளைப் பூரணப் படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இம்மாநாட்டில் சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷல் காஷிம், அமைச்சுக்களின் சிரேஷ்ட பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -