எம்.எஸ்.எம்.சாஹிர்-
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எஸ்.பி. பௌண்டேசனின் அனுசரணையுடன் “மாற்றத்திற்கான பங்காளர்கள்” (Partners For Change) அமைப்பினால் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இரத்ததான முகாம் கடந்த சனிக்கிழமை (20) காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இளைஞர்களை இரத்ததானத்திற்கு ஊக்கப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும் இவ்வேலைத்திட்டம், இவ்வமைப்பின் திட்ட இணைப்பாளர் ஹக்கானி ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஒத்துழைப்போடு, இளைஞர்களின் முழு பங்களிப்புடன் மிகச் சிறப்பாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.பி. காஞ்சனா செனவிரத்னவோடு, வைத்திய பரிசோதனை குழுவினர் மற்றும் ஏற்பாட்டுக்குழுவினர் நிற்பதனையும் அத்தோடு இரத்ததானம் வழங்குவதனையும் படங்களில் காணலாம்.