ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் கடந்த 23 ஆம் திகதி கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது இன்னொரு ஏமாற்று நாடகமும் அங்கு அரங்கேறியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விடயத்தில் இலவம் பஞ்சுக்காக காத்திருந்த கிளி போன்று கட்சியின் “பவர்” இல்லாத செயலாளரான ஹஸன் அலி ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.
கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஹஸன் அலியின் கல்கிஸவில் உள்ள வீட்டுக்கு சிலரை கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் தூது அனுப்பியுள்ளார். கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டும் உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சிலவற்றை அன்றைய தினம் தலைவர் உங்களிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய ஹஸன் அலி பலத்த எதிர்பார்ப்பில் அங்கு சென்றுள்ளார். கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீமும் ஹஸன் அலியும் தேனும் பாலும் போன்று பழகியுள்ளனர். மிக நெருக்கமாக மனம் விட்டு உரையாடியுள்ளனர். இதனைக் கண்ணுற்ற உயர்பீட உறுப்பினர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பறிக்கப்பட்ட அதிகாரங்கள் தனக்கு வழங்கப்படப் போகிறது என்ற நம்பிக்கையில் ஹஸன் அலியும் எவ்வித எதிர்வாதங்களையும் முன்வைக்காமல் அமைதியாக, அமைச்சர் ஹக்கீமின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தோரணையில் காணப்பட்டுள்ளார். ஆனால் இறுதியில் ஏமாந்த சோனகிரி என்ற நிலையில் ஹஸன் அலி வீடு திரும்பியதுதான் மிச்சம்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பில் குழு ஒன்றை நியமிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுவில் ஐவரை நியமிப்பதாக அங்கு இணக்கம் காணப்பட்டது. அவர்களில் இருவரின் பெயர்களை ஹஸன் அலி சிபார்சு செய்துள்ளார். அதன்படி அந்தக் குழுவில் அவர்கள் இருவரும் உள்வாங்கப்பட்டனர். அதாவது, ஓடியபடி கடிக்க வரும் நாய்க்கு ஒரு துண்டு எலும்பு போட்டால் வாலாட்டி நிற்கும் என்பதனை அமைச்சர் ஹக்கீம் நன்றாக உணர்ந்திருப்பதால் இந்த விடயத்தில் ஹஸன் அலியை திருப்திப்படுத்துவதற்காக அவர் சிபார்சு செய்த இருவரையும் குறித்த குழுவுக்குள் உள்வாங்கி தனது ராஜதந்திர நகர்வை முன்னெடுத்து விட்டார்.
ஆனால், ஹஸன் அலியோ தனக்கு சந்தனம் பூசுவார்கள் (அதிகாரங்களை வழங்குவார்கள்) என நினைத்து அரசியல் உயர்பீட கூட்டத்துக்குச் சென்று சாணத்தை முகத்தில் தேய்த்தவராக வெளியே வந்தார்!