அம்பாறை ஹிங்குறான பகுதிக்கான பொதுச்சந்தை உள்ளூராட்சி சபைகளின் கீழ் நெல்சிப் திட்டத்தில் (38 மில்லியன்) மூன்று கோடி எண்பது இலட்சம் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட சந்தையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுடன் (7.7 மில்லியன்) எழுபத்தேழு இலடம் பெறுமதியான வீதி மற்றும்பல மில்லியனில் நிறுவப்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையமும் நேற்று (27) உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எ.ரி.எம்.ராபி யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு ஆரம்பிக்கும் நேரத்துக்கு முன்பதாக குறிப்பிட்ட இடத்துக்கு விஜயம் செய்த ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் திருமதி கமகே, மாகாண சபை உறுப்பினர் மஞ்சுல பெர்ணாண்டோ ஆகியோர் பத்துப்பேர் கொண்ட குழுவுடன் சட்ட விரோதமாக அங்கு சென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளைக் குழப்பி நினைவுக்கற்களை சேதப்படுத்தி அங்கு திரைநீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த சீலைகளை கிளித்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
அடுத்து 10 நிமிடங்களின் பின்னர் அங்கு விஜையம் மேற்கொண்ட முதலமைச்சரை வரவேற்ற மாகாணசபை உறுப்பினர்களும் பிரதேச மக்களும் முதலமைச்சர் பொதுச்சந்தையைத் திறக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பின்னர் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அங்கு உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டி.மெத்தானந்த சில்வா தெரிவித்ததாவது:
இங்கே நடைபெற்ற விடையம் மிகவும் வெட்கப்படவேண்டியவை நானும் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதால் அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். நடந்த கேவலமான விடையத்துக்காக முதலமைச்சரிடம் மன்னிப்புக்கோருகிறேன். என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாணசபை தவிசாளர் சந்திரதாஷ கலபதி , உறுப்பினர் மெத்தானந்த சில்வா, முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபி அவர்களுடன் அரச அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







