இனி பரீட்சை நிலையங்களின் மேற்பார்வையாளர்களாக அதிபர்கள் - கல்வி அமைச்சர்

டுத்த வருடம் நடைபெறும் அனைத்து பரீட்சைகளுக்கும் பரீட்சை மத்தியநிலையங்களின் மேற்பார்வையாளர்களாக புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிபர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற உயர்தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது மாணவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்திவிட்டு கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்கள் அமைதியாக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -