பல திருட்டுச் சம்பவத்துக்குரியவர் இன்று பொலிசாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மஹதிவுலவெவ பகுதியில் ஒன்றரை வருட காலமாக 05 வழக்குகளுக்கு அழைப்பானை விடுக்கப்பட்டும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவரை இன்று அதிகாலை (23) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.எம்.ஞானக பிரசாத் திஸாநாயக்க (30 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளை திருடியமை-14666 ரூபாய் பெறுமதியான உழவு இயந்திரத்தின் பொருற்களை திருடியமை-மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை- சட்ட விரோதமான மீன் பிடி வலைகளை தம்வசம் வைத்திருந்தமை -42000 ரூபாய் பெறுமதியான மாடுகளை திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக மொறவெவ பொலிஸ் நிலையத்தினால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பிடியானை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சட்ட விரோதமான மீன் பிடி வலைகளை தம் வசம் வைத்திருந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சந்தேச நபருக்கு ஜயாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் ஒவ்வொரு மாதமும் -இறுதி ஞாயிற்றுக்கிழமை மொறவெவ பொலிஸ் நிலையத்திற்கு கையொப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


தொடர்ந்தும் மற்றைய வழக்குகளுக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டமையினால் மற்றைய வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -