உசைன் போல்ட் விரைவில் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு...?

ரியோ ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைத்த ஜமைக்கா நாட்டு சூப்பர் ஸ்டார் உசைன் போல்ட் விரைவில் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத சாதனையை ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் நிகழ்த்தி தனது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 114 விநாடிகளில் 9 தங்கப்பதங்களை வென்ற ஒரே விளையாட்டு வீரர். அதாவது, மைதானத்தில் 2 நிமிடங்கள் மட்டும் செலவிட்டு போல்ட் 9 தங்கப்பதங்களை இதுவரை வென்றுள்ளார்.

போல்ட்டின் வேகத்தை ஒரு வாகனத்தின் வேகத்தோடு ஒப்பிட்டால், போல்ட் மணிக்கு சுமார் 3,54,056 கி.மீ தூரம் ஓடக் கூடியவர் ஆவர். இவ்வளவு வேகத்தில் இதுவரை எந்த மனிதரும் ஓடியதில்லை. இதனால் தான், போல்ட் ‘ஒரு மின்னல் மனிதர்’ என அழைக்கப்படுகிறார்.

உலகம் முழுவதும் தற்போது போல்ட்டின் பெயரை உச்சரித்து வரும் நிலையில், அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் போல்ட் விளையாட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள செய்திகளில் ‘புகழின் உச்சத்தில் இருக்கும்போது தான் ஒரு சாதனையாளர் ஓய்வு பெற வேண்டும். இந்த அபார சாதனையை மற்றவர் முறியடிக்கும்போது போல்ட் களத்தில் இல்லாமல் இருப்பது தான் அவருக்கு பெருமை’ என ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஊடகங்களின் செய்திகளை போல்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஓய்வு பெறுவது குறித்து போல்ட் தனது சொந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு வயதாகி கொண்டே செல்கிறது. 100 மீற்றர் ஓட்டப்பந்தியத்தில் எனது சாதனையை நானே முறியடிப்பேனா என்பது கடினம் தான்.

லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது 200 மீற்றர் சாதனையை ரியோ ஒலிம்பிக்கில் முறியடிக்க நினைத்தேன். ஆனால், முடியவில்லை. லண்டனில் 19.32 வினாடிகளும் ரியோவில் 19.78 வினாடிகள் தான் ஓட முடிந்துள்ளது’ எனக் கூறியுள்ளார். மேலும், ரியோவில் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டியும் அடுத்தாண்டு லண்டன் நகரில் நடைபெற உள்ள World Championships விளையாட்டு போட்டி தான் எனது கடைசி விளையாட்டு போட்டிகள் என போல்ட் தீர்மானித்துள்ளார்.

‘நான் ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரர் என்பதை இந்த உலகிற்கு நிரூபித்து விட்டேன். இதற்காக தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றேன். எனவே, இது தான் எனது கடைசி ஒலிம்பிக் போட்டி’ என உசைன் போல்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -