ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டுக்குச் செல்வதை விடவும், FCID யிற்கு வந்து செல்வது நல்லது என ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிதி மோஷடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு இன்று வருகை தந்த அவர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
கடந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தில் பலரை சிறைப்படுத்தினர். பின்னர் நடைபவனியில் கலந்துகொண்டதற்காக சிலரை சிறைப்படுத்தினர். தற்பொழுது நடைபெறவுள்ள 65 ஆவது மாநாட்டுக்குப் பின்னர் எத்தனை பேரை சிறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்களோ தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.